Skip to main content

IFHRMS Wipro Error

 அனைத்து அரசு அலுவலகங்களிலும் IFHRMS என்ற செயலியின் மூலம் பணம் சார்ந்த பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இம்மாதம் மார்ச் மாதத்தில் இருந்து IFHRMS செயலியானது மிகவும் ஸ்லோவாகவும் உபயோகப்படுத்த இயலாத நிலமைக்கும் உள்ளது. மேலும் அனைத்து தினங்களிலும் மண்டல வாரியாக நேரம்(ஒன்றரை முதல் 2 மணி நேரம் மட்டுமே) ஒதுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாதிக்கு மேற்பட்ட நேரமானது செயலி வேலை செய்யாமல் உள்ளது. நிதி ஆண்டின் இறுதி மாதம் ஆன இம்மாதம் அனைத்து அலுவலகங்களும் நிதியினை ஒதுக்கீடு செய்து பயன்படுத்த அனைத்து அலுவலர்களும் வேலைப்பளுவினை அதிக அளவு உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர்களிடம் திணிக்கின்றனர். ஒருபுறம் இம்மாதிரியான உயர் அலுவலர்களின் காட்டமான நடவடிக்கைகள் மற்றொருபுறம் செயலியினை உபயோகப்படுத்த இயலாத நிலை என பணி புரியும் பணியாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. கடந்த 15 நாட்களாக பட்டியல் தயாரிக்கும் எந்த ஒரு பணியாளரும் சரியான மனநிலையில் இருப்பதாக தெரியவில்லை மன உளைச்சலிலேயே உள்ளனர் சரியாக செயல்பட கருவூல கணக்கு துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்படி IFHRMS செயலியின் server களை maintain செய்யும் நிறுவனமான WIPRO நிறுவன ஊழியர்களிடம் மேற்கண்ட குறைகளை கேட்கும் பொழுது அவர்கள் சரியான பதில்களை தருவதில்லை. மேலும் கருவூல கணக்குத் துறை ஆனது WIPRO நிறுவனத்திடம் அடிபணிந்து செயல்படுகிறதா எனவும் தோன்றுகிறது. எனவே மேற்படியான குறைகளை அரசு உடனடியாக நிவர்த்தி செய்து பணியாளர்களின் மன உளைச்சலை நீக்க வழிவகை செய்ய வேண்டும்.

அன்பார்ந்த தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களே... அதிலே IFHRMS பட்டியல் போடும் நண்பர்களே.. வணக்கம்.


 நமது தலைசிறந்த ஐ எப் எச் ஆர் எம் எஸ் சர்வர் மார்ச் மாதத்தில் சிறப்பாக இயங்கி எல்லோரும் மனதிலும் ஆட்சி செய்து வருவதை எவராலும் மறுக்க முடியாது .

ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் மென்பொருள் சரி செய்யபடவில்லை...

இன்னமும் சர்வர் சரியாக வேலை செய்வதில்லை அல்லது மேம்படுத்தப்படவில்லை..

மத்திய அரசு நிறுவனமான தேசிய தகவலியல் மையத்தில்  ifhrms தொடர்பான மென்பொருள் செய்து தர கேட்டிருந்தால் பைசா செலவில்லாமல் அவர்களால் ஒரு சீரிய மென்பொருளை அளித்திருக்க முடியும் ஆனால் தமிழக அரசு விப்ரோ நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் ஒரு அரைவேக்காடான மென்பொருளை அதுவும் அரைகுறை நிலையிலேயே வெளியிட்டு அவர்களால் செய்யப்பட வேண்டிய சோதனைகள் அனைத்தையும் அரசு ஊழியர்களைக் கொண்டு பைசா செலவில்லாமல் செய்ததுடன் (மென்பொருளை சோதிக்க ஆகும் செலவுகள் ஊழியர் சம்பளம் அனைத்தும் அவர்களுக்கு மிச்சம்)அம் மென்பொருளில் தேவையான மாறுதல்களை உடனுக்குடன் செய்யாமல் இன்னமும் நம்மிடமே வேலை வாங்குவது வருத்தத்துக்கும் வேதனைக்கும் உரியது...

இதனை மாநில நிர்வாகத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண ஏன் யாரும் சொல்வது கூட இல்லை என்று தெரியவில்லை அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள  மேம்பாட்டு திட்டத்தினால் என்ன பயன்....

பட்ஜெட் முடிவில் பட்டியலிட வேண்டிய அவசரத்தில் அனைத்து மாவட்டத்தினரும் போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்காக தனித்தனியே நேரம் ஒதுக்கீடு செய்திருப்பது கொடுமையானது ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் ஆவது சர்வேயர் வேலை செய்கிறதா என்றால் அதுவும் இல்லை அது செய்யும்  வேலை சுற்றிக் கொண்டிருப்பது மட்டுமே எனவே தோழர்களே மாநில மையத்தின் கவனத்திற்கு இதனை உடனடியாக கொண்டு செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

உங்களுக்கு மன உளைச்சலை இலகுவாக ஏற்படுத்தக்கூடிய மருந்தாகவும் , மன அழுத்தத்தை கொண்டு வரக்கூடிய சிறப்பான செயலாகவும் தொடர்ந்து உங்கள் கண்களுக்கு டைமிங் ஸ்லாட் மூலமாக விருந்து படைத்து வரும் இப்படிப்பட்ட சர்வரை பின்புலமாக இயக்கும் விப்ரோ நிறுவனத்திற்கு கோடி நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

 திடீரென காணாமல் போகும் ICONகள்..... திடீரென நேரங்கள் மாறி போகும் வேலை செய்யும் நேரங்கள்...... இப்படி நம்மை சந்தோஷத்தில் திக்கு முக்காட செய்யும் திரில்லான இந்த மனித வள மேம்பாட்டு ஆணையத்தின் வலைதளத்தை பாராட்டுவதில் பெருமைப்படுகிறோம் நன்றி.

Dear Sir/ Madam,

IFHRMS application shall be enabled for end users with the following access timings today 28.03.2023

1.) No restrictions for Finance, Budget and Treasury users.

2.) Between 09:00 AM to 11:00 AM - Access enabled for DDOs of Tirunelveli and Trichy regions.

3.) Between 11:00 AM to 02:00 PM - Access enabled only for DOF, Budget and Treasury users.

4.) Between 02:00 PM to 04:00 PM - Access enabled for DDOs of Coimbatore and Chennai regions.

5.) Between 04:00 PM to 06:00 PM - Access enabled for DDOs of Madurai and Vellore regions.

6.) After 06:00 PM till early morning hours - Access enabled for all users.

Thanks & Regards.

--------------- 

Wipro கவணத்திற்கு!!!

போகிற போக்கில் இதுவும் ஒரு பதிவு என்று கடக்காமல் சற்று கவணிக்கவும்.

அரசு அலுவலகங்களில் அனைத்து பட்டியல்கள் தயாரிக்கவும் அரசு அலுவலர்களின் பணி  விவரங்களை பதிவு செய்யவும் Integrated Financial and Human Resource Management system (IFHRMS) உருவாக்கப்பட்டது.

அலுவலக நேரத்தில் Server வேலை செய்ய வேண்டுமே ஒழிய server வேலை செய்யும் நேரம் கெட்ட நேரத்தில் பட்டியலை தயார் செய்வது சிரமம்.

அவ்வாறு நேரம் காலம் பார்க்காமல் எப்போது server கிடைக்கின்றதோ, அந்த நேரத்தில் நாங்கள் வேலை செய்வதை தாங்கள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றீர்கள்.

வேலை செய்யாமல் வசை வாங்கினால் நியாயம். ஆனால் வேலை செய்ய தயாராக இருந்தும் வேலை செய்ய இயலாமல் இருக்கும் பட்சத்தில் வசை வாங்க என்ன தலையெழுத்தா??

கோப்புகளை அலுவலகம் தவிர்த்து வெளியே எடுத்து செல்ல முடியாது... கூடாது. அவ்வாறு இருக்க 6:00 பிப க்கு மேல் server வேலை செய்யும் என்று கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தொழில்நுட்ப கோளாறு, தவறு நடப்பது மனித இயல்பு என்பது எல்லாம் எங்களுக்கும் புரிகின்றது. ஆனால் எங்கள் நிலைமையை Wipro புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சிறு சிறு மாற்றங்களுக்கும் நாட்கணக்கில் காத்திருப்பது வெட்கக்கேடு.

இதை குறையாகவோ அல்லது கண்டனமாகவோ எண்ணாமல், ஆக்கபூர்வமான வழிக்கு சிந்தித்து இனி வரும் காலங்களில் IFHRMS ல் சிரமம் இல்லாமல் வேலை செய்ய வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நன்றி

வணக்கம்
24.03.2022

பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் மூலம் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்கள் கூடுதல் தேவையுள்ள இதர பள்ளிகளுக்கு  பணியிடத்துடன் நிரவல் செய்யப்பட்டு பணிபுரிந்து வருபவர்களுக்கு IFHRMS-ல் உரிய பள்ளிகளுக்கு பணியிடத்தினை (Post) மாறுதல் செய்ய இயலவில்லை இதனால் இவர்களுக்கு இம்மாத (மார்ச் 2022) ஊதியம் பெற்று வழங்குவதில் பெறும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருவூலம் மற்றும் Wipro  பணியாளரிடம் தொடர்பு கொண்டால் பணியிடத்தினை மாறுதல் செய்வதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பணியிடத்தினை மாற்றம் செய்யவோ அல்லது கூடுதல் பணியிடம் சேர்க்கவோ துறையின் தலைமையிடத்திற்கு (Head of the Department) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். இன்னும் ஐந்து பணி நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு பணம் பெற்று வழங்கும் அலுவலரும் இப்பணியினை மேற்கொள்ள துறை தலைமையிடத்திற்கு சென்று மாற்றம் செய்ய வேண்டும் எனில் இந்த மாதம் ஊதியம் பெற்று வழங்குவதில் மிகவும் சிக்கல் ஏற்படும். 

இந்த நிலையில் மார்ச் மாதம் என்பதால் 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான ஊதியமல்லாத பட்டியல்கள் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதில் இந்த பிரச்சனை எப்படி தீர்வு காண்பது என தெரியாத நிலையில் பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.

IFHRMS-ல் பணியிடத்தினை மாறுதல் (Post Maping)  செய்ய அந்தந்த பணம் பெற்று  வழங்கும் அலுவலரே மாற்றம் செய்துகொள்ள வழிவகை செய்தால் நன்றாக இருக்கும் என  அலுவலகப் பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. குறைந்த பட்சம் மாவட்ட அளவில் உள்ள அலுவலகம் மூலமாக மாற்றம் செய்ய வழி வகை செய்தால் நன்றாக இருக்கும் எனவும் கருதுகிறார்கள்.

இந்நிலையில் பணியிடம் மாறுதல் செய்ய இயலாத நிலையில் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஊதியம்  பெற்று வழங்காத நிலை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்று தெரியவில்லை. #wipro #ifhrms #tngov

Comments

Post a Comment

Popular posts from this blog

photo gallery

About Association

welcome to IT Association for web designers, developers, ITES companies, Software comapnies, Teaching professionals, website owners and webmasters. IT Association is national, professional, non-profit making Society and only organisation of professionals/educators in the field of software, hardware, BPO, KPO, Website design and development. For memberships, IT problems, advertisements, suggestions, links exchange and article postings please contact us.

Useful Blog! Read it!